போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு – மத்திய அரசின் அசத்தல் திட்டம்!
போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு – மத்திய அரசின் அசத்தல் திட்டம்!
மத்திய கல்வி நிறுவனமான ஐஐடி கான்பூருடன் இணைந்து கல்வி அமைச்சகம் சார்பில் மாணவர்கள் முக்கிய நுழைவுத் தேர்வுக்கு தயாராக SATHEE என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
புது செயலி
நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் உயர்கல்வி பயிலவும், அரசுத் துறைகளில் பணிபுரியவும் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த போட்டித் தேர்வுகளில் ஏழை எளிய மாணவர்களும் கலந்து கொள்ள மத்திய கல்வி நிறுவனமான ஐஐடி கான்பூருடன் இணைந்து மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் SATHEE (Self Assessment Test and Help for Entrance Exams) என்ற புதிய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மார்ச் 7 புதுவை & காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை – மகிழ்ச்சியில் மாணவர்கள்!
அந்த வகையில் இந்த புதிய தளம் மூலமாக இந்திய மாணவர்களுக்கு போட்டி மற்றும் பிற தேர்வுகளுக்குத் தயாராவதற்கான சுய-வேகம் அதிகரிப்பு மற்றும் அவர்களுக்கான மதிப்பீட்டு தளமாக இருக்கும் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தளம் மூலம் ஏழை மாணவர்களும் பல பெரிய நுழைவுத் தேர்வுகளில் கலந்து கொள்ள வழிகாட்டுதலாக இருக்கும் என யுஜிசி தலைமை நிர்வாகி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தளத்தில் இருக்கும் மாணவர்களின் கருத்து கேட்டு, பின் IIT மற்றும் IISc ஆகிய நிறுவனங்களின் ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட வீடியோக்கள் மூலம் விளக்கம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.